எங்கள் செயல்பாடுகள்
சங்கமம் அறக்கட்டளை
- பசியில்லா கரூரை உருவாக்கும் முயற்சியில் கரூரின் சாலையோர ஆதரவற்றோர்களுக்கு மூன்று வேளை உணவு வழங்குதல்.
- பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விக்கு உதவிடுதல் (அரசுப்பள்ளி, கல்லூரி)
- வறுமையில் வாழும் வயதான முதியோர் மற்றும் தனிமையில் வாழும் மாற்றுத்திறனாளிகளின் உணவுத் தேவையை பூர்த்தி செய்தல்.
- சாலையோர ஆதரவற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோர்களுக்கு முடிதிருத்தம் செய்து குளிப்பாட்டி, புத்தாடை அணிவித்தல்.
- வறுமையில் வாழும் மற்றும் தாய் (அ) தந்தையை இழந்த குழந்தைகளுடன் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு, இனிப்பு, புத்தாடைகள் வழங்கி கொண்டாடுதல்.
- கல்லூரி கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களுக்கு உதவிடுதல். கல்லூரி மாணவர்களுக்குக்கிடையே மனிதநேயத்தை போற்றவும், தன்னம்பிக்கையுடன் வாழவும் சிறப்புரை ஆற்றுதல்.
- சமூக அக்கறையுடன் செயல்படும் பல்துறை சாதனையாளர்களை பாராட்டி விருதுகள் வழங்குதல்.
- திருமண மண்டபம், இல்ல விசேஷங்களில் மீதமாகும் உணவினை பெற்று பசியால் வாடுபவர்களின் இருப்பிடம் தேடிச் சென்று வழங்குதல்.
- கரூரில் சாலையோரம் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவின்றி விடப்பட்ட முதியோர்களை காவல்துறையின் அனுமதியுடன் காப்பகத்தில் சேர்த்தல்.